பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Nirmala 2020 05 22

Source: provided

புதுடெல்லி : பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ.21 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு பொருளாதாரத் திட்டங்களை கடந்த வாரம் நி்ர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில் அது தொடர்பாக கடன் வழங்குதல், பொருளாதார மறுமலர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதேபோன்ற கூட்டம் கடந்த 11-ம் தேதி நடத்தப்படுவதாக முன் அறிவிக்கப்பட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை கூடிய போது, தற்சார்பு பொருளாதாரத்துக்கான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து