முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தி.மு.க. துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பா.ஜ.க.வில் இணைந்தார்.

முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார்.

அவரை சமீபத்தில், தி.மு.க. துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.க.வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. டி.வி. ஒன்றுக்கு, துரைசாமி நேற்று முன்தினம் (மே 21) அளித்த பேட்டியில், ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் என்றார். இந்நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மற்றும் இல.கணேசன் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து