முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதம் தேசிய பேரிடருக்கும் அதிகமானது : மே.வங்க முதல்வர் மம்தா பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்துக்கு ஏற்பட்ட சேதம் தேசியப் பேரிடருக்கும் அதிகமானது என்று கூறலாம். என் வாழ்வில் இதுபோன்ற புயலை நான் பார்த்தது இல்லை. மாநிலத்தில் 60 சதவீத மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான ஆம்பன் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது. லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை புயலுக்கு 80 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,  மேற்கு வங்கத்தை தாக்கிய அம்பன் புயல் போன்றதை என் வாழ்வில் இதுவரை நான் பார்த்தது இல்லை. தேசியப் பேரிடரைவிட அதிகமான சேதம் என்றுதான் குறிப்பிட வேண்டும். மாநிலத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின் மீண்டும் இயல்புநிலை திரும்ப சிறிது காலம் ஆகும். ஏறக்குறைய 8 மாவட்டங்களைப் புயல் சீரழித்து விட்டது. 60 சதவீத மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் 6 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை நான் மிகப்பெரிய பேரழிவு என்றுதான் சொல்வேன். மாநில அரசும், அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். போலீஸார் ஓய்வின்றி உழைக்கிறார்கள். மூன்று சவால்களுக்கு எதிராகப் போராடுகிறோம். ஊரடங்கு, கொரோனா வைரஸ், இப்போது இந்தப் பேரழிவால் கிராமங்கள் முழுமையும் புயலால் அழிக்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள சூழலில் எந்தத் தகவலும் தர முடியாது என தலைமைச் செயலாளர் விரிவான சேத அறிக்கையைத் தயார் செய்து பிரதமர் மோடியிடம் அளிப்பார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புயல் குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அவருக்கு மேற்குவங்க மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்று மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து