முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அம்மாவின் இல்லத்தை ஆலயம் ஆக்கி இப்புவி உள்ளவரை அழியா புகழை அம்மாவுக்கு பெற்றுத்தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி  அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீர்மானத்தை நிறைவேற்றினார் 

புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார் அதனை தொடர்ந்து, அம்மா வாழ்ந்த இல்லத்தை தமிழ் வளர்ச்சித் துறை நிர்வாக ஒப்புதல் அளித்தது அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்த வதற்காக பூர்வாங்க அறிவிப்பு கடந்த, 28.6 2020 அன்று வெளியிடப்பட்டது அதன்பின் 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது இதைத்தொடர்ந்து அம்மா இல்லம் மற்றும் அசையும் சொத்துக்கள் தற்காலிகமாக அரசுடைமை ஆக்கியும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார் இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணைத்தலைவர் முதல்வரும் மற்றும் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இன்று நன்றி தெரிவித்து வரும் வேளையில் கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது; 

ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களும், உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் கும்பிட்டு மகிழ்கின்ற, ஒப்பில்லா பெரும் தலைவி, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, சுவாசித்த இல்லத்தை, உலகமே பூஜித்து மகிழ்ந்திட வகையில்,கடந்த 17.8.2020 அன்று வரலாற்று மிக்க சட்டப்பேரவையில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், விவசாயிகள் பாதுகாவலர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அம்மாவிற்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், கொடை உள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்து கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு, இதன்மூலம் அம்மாவின் இல்லத்தை ஆலயமாக்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்

தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக அம்மா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது இதன் மூலம் இப் புவி உள்ளவரை ,அம்மாவின் புகழை மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்த, கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் கரிகாலச்சோழன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், துணைமுதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை நெஞ்சார்ந்த நன்றியை உள்ளத்து பூரிப்போடு உரித்தாக்கி மகிழ்கிறது.

உலைக்கு விலையில்லா அரிசி, விஞ்ஞான யுகத்திற்கு நம் குலப் பெண்களை விரல் பிடித்து அழைத்து வந்து மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இவற்றோடு கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கறவை மாடு, மற்றும் வெள்ளாடு வழங்கும் ஒப்பிலா திட்டத்தோடு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்குகிற தன்னிகரில்லா வழங்கும் திட்டத்தோடு, மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு, இவற்றோடு மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றிய மகோனதம், மக்களை தேடி அரசு எனும் மறுமலர்ச்சி என்றெல்லாம் இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கமாக திருப்பி காட்டிய, தெய்வீக தேவதையின் உறைவிடமாம் வேதா இல்லத்தை, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வருகைதந்து தரிசிக்கும், வெற்றித் திருமகளின் நினைவிடம் ஆக்கித் தந்த, கழகத்தின் எல்லைச்சாமிகளாம், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கு, அம்மாவை நெஞ்சத்தால் நிறுத்தி குலசாமியாய் கும்பிட்டு மகிழும், ஒன்னரை கோடி கழக தொண்டர்கள் சார்பில் கழக அம்மா பேரவை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி நன்றி மலர்களை காணிக்கையாக்கி மகிழ்கிறது 

வரலாறு படித்தோருக்கு மத்தியில், வரலாறு படைத்திட்ட வாகை தலைவியாக, ஆறறிவு படைத்த தலைவர்களுக்கு மத்தியில் நூறு அறிவு பெட்டகமாய் திகழ்ந்து, அன்னை தமிழகத்தை அகில இந்தியாவின் முன்னேறிய முதன்மை மாநிலமாக்க, தன் ஆயுளையே அர்ப்பணித்து உழைத்திட்ட, அம்மாவின் புகழ் நிறைந்த பொக்கிஷ வரலாற்றை ,வருங்கால தலைமுறை வந்து வாசித்து வணங்கி செல்வதற்கான படிப்பகமாய், 

தாய் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக அமைத்து தந்தமைக்காக இப் புவியியல் காலம் உள்ளவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், அப்பழுக்கில்லாத தமிழர்களும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், மாண்புமிகு முதலமைச்சர் ,அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான, தமிழக அரசை என்னாளும் கொண்டாடி மகிழ்வார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்து கொண்டு, 

என்றைக்கும்நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை மாண்புமிகு முதலமைச்சருக்கும்,மாண்புமிகு முதலமைச்சருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை,கழக அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் கழக அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து