முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்

புதன்கிழமை, 27 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று உலக முழுவதும் பரவி, உலக மக்களை பீதிக்குள்ளாகி வருவதால், டி 20 உலகக் கோப்பை போட்டி  உள்பட அனைத்து வகையான உலக போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டன. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  வரை நீட்டித்து உள்ளன. அது போல டி20 போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவிலும்,  வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிலையில்,  டி 20 உலகக் கோப்பை போட்டி  தள்ளி வைப்பது குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. வருகின்ற அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. இதற்கான திட்டமிடலும் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் , உலகெங்கும் உள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த ஒத்திவைப்பு குறித்து ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து