முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,246-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 11,313 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 765 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 154-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 13,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 4,66,550 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.87 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,334 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 874 பேருக்கு தொற்று உறுதியானது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து