முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா? : மருத்துவர்கள் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவ பிரதான காரணமாக இருப்பது, தும்மும் போதும், இருமும் போதும் நுண்துகள்கள் சிதறி பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் தொற்று ஏற்படாது.  ஒருவர் இறந்ததும் அவரது உடலில் வைரஸ் தொற்று பல்கி பரவுவது நின்று போகும். சடலத்தை எரிப்பதால், புதைப்பதால் தொற்று பரவாது. ஆழமான குழியை தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும் போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது. புகையால் கொரோனா வைரஸ் பரவாது.

தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம், அப்படி இருந்தாலும் சடலத்தை தொடாத வரையில் வைரஸ் பரவாது. வழிகாட்டுதலின்படி, இறந்தவரின் உடலை தொட அனுமதி கிடையாது. அதனை சுகாதார ஊழியர்களே தகுந்த பாதுகாப்புடன் கையாள்வார்கள். இவ்வாறு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து