முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை துவரிமான் - அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதிவரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணி : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்கலில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் மதுரை மேற்குவட்டம் துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 25.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கண்மாய்களை சீரமைக்க முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2016 - 17ம் ஆண்டு தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.100 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்திற்கு கண்மாய்களை சீரமைக்க, ரூ.570.15 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகள் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயலாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2017-18 ம் ஆண்டு ரூ.331.00 கோடிக்கு, ஒப்பளிக்கப்பட்டு, அதில் மதுரை மாவட்டத்திற்கு கண்மாய்களை சீரமைக்க, ரூ.2,568.46 லட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டன.

மேலும் 2019 - 20 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்,நிலைகளை புனரமைக்க, ரூ.499.688 கோடிக்கு ஒப்பளிக்கப்பட்டு, அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை சீரமைக்க, ரூ.4,312.05 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக, கண்மாய்கள் புனரமைக்கும் பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டன. நடப்பு நிதியாண்டில்(2020 - 21) ரூ.499.7997 கோடி மதிப்பீட்டில், தமிழகம் முழுவதும் மொத்தம் 1,387 பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில், 56 பணிகளை மேற்கொள்ள, ரூ.3,121.60 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

மதுரை மேற்கு வட்டம், துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்கால்களை புனரமைக்கும் பணி குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடைபெற உள்ளது. கிருதுமால் நதி மூலம் பாசன வசதி பெறும் துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராம விவசாயிகளின் கோரிக்கையின்படி, கிருதுமால் ஆற்றின் 3 கிளைக் காய்வாய்களின் எல்லையினை நிர்ணயம் செய்து எல்லை கற்கள் ஊண்டி, கிளைக் கால்வாய்களை தூர்வாருதல், கிளைக் கால்வாய்களில் கான்கீரிட் சுவர்கள் அமைத்தல் மற்றும் கிருதுமால் அணைக்கட்டில் உள்ள சட்டர்களை சரிசெய்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.25.30 இலட்சங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விவசாயிகள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேற்கண்ட பணிகள் செயல்படுத்தப்படுவதால், கிருதுமால் நதி கிளைக் கால்வாய்கள் மூலம் சுமார் 102 ஹெக்டேர் பரப்பில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிமராத்துத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில மாணவரணி இணை செயலாளர் பா.குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற் பொறியாளர் லீலாவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து