எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம் – திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்;
தஞ்சாவூர் மாவட்டம் – திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;
விழுப்புரம் மாவட்டம் – சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்);
சேலம் மாவட்டம் – பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் – பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் – கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்;
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ.கார்த்திக், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


