முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த வரும் 15-ம் தேதிக்கு பிறகு காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இல்லங்களுக்கு உள்ளாகினர். இந்த சூழ்நிலையில், ஐந்தாவது ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார வாரியத்தால் 2 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்றும், ஊரடங்கு காரணமாக 4 மாத மின் நுகர்வு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. முந்தைய மாத யூனிட் கழிக்கப்படாமல், மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக பல அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மின்சார வாரியம் இதனை அறிவித்துள்ளது. கணக்கீடு முறையில் சந்தேகங்கள் இருந்தால் மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம். கணக்கீடு முறை http://tangedco.in.gov.in இணையதளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த வரும் 15-ம் தேதிக்கு பிறகு காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து