முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது : நோய் கட்டுப்பாட்டு இயக்குனர் கவலை

புதன்கிழமை, 24 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் கூறி உள்ளார்

அமெரிக்காவில் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 121,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்த நாட்டை மண்டியிட வைத்துள்ளது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்பீல்ட் கூறி உள்ளார்.

ஹவுஸ் எனர்ஜி அண்ட் காமர்ஸ் கமிட்டி விசாரணையின் போது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்பீல்ட் கூறியதாவது:-

இந்த வைரஸை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் செய்யக்கூடிய சிறந்ததை நாங்கள் செய்துள்ளோம். ஒரு சிறிய வைரஸ் காரணமாக நாடு சுமார் 7 டிரில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது. பொது சுகாதார தரவுகளின் முக்கிய திறன்களில் பல தசாப்தங்களாக குறைந்த முதலீட்டை இந்த வைரஸ் எடுத்துக்காட்டுகிறது. உடைந்த அமைப்பை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து