முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை அழிக்கும் ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா முடிவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தானில் பாலகோட் தாக்குதலுக்கு பயன்படுத்தியதை போன்ற (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்தியா - சீனா எல்லையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா ஏற்கனவே விமானப்படைகளை தயார்படுத்தி வருகிறது.

இந்நிலையில் எதிரிகளை கொத்தாக அழித்தொழிக்கும் ஸ்பைசஸ் 2000 ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுகள் 60 கி.மீ., முதல் 70 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது.

இந்த வெடிகுண்டில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்கல் திறன் விமானத்தில் உள்ள கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் SPICE 2000, போர் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கியது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து