Idhayam Matrimony

கனிமொழி மீது நீதிமன்ற அவதூறு வழக்கு : அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவொற்றியூர் : சாத்தான்குளம் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் வாய்ப்புகள் இருப்பதாக  அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

பெரம்பூர் தொகுதி தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வியாசர்பாடி சாமந்திபூ காலனியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும், களப்பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் வழங்கி அவர்களுக்கான பயிற்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார், அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தி.மு.க. எம்.பி. கனிமொழி, சாத்தான் குளம் விவாகரத்தில் தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது சுமத்தி வருகிறார்.  அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியோடு அவர் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற புகார்கள் தெரிவித்து வருகிறார், சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகளை தப்ப வைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார், அந்த குற்றச்சாட்டை அவர் திரும்ப பெற வேண்டும், உயர்நீதிமன்றம் கூட தமிழக அரசு இந்த விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளது,

இந்த நிலையில் தமிழக அரசு மீது கனிமொழி கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே கனிமொழி மீது சட்டப்பூர்வமான அவதூறு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது என்று கூறினார். 

மேலும் அவர் கூறும் போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லாதால் நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தி.மு.க.விடம் பல்லாயிரம் கோடி சொத்து உள்ளதே, மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் அவர்களே தந்து உதவலாமே. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து