முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை : இங்கிலாந்து அதிரடி முடிவு

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை வரும் 10-ம் தேதி முதல் கிடையாது என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8-ம் தேதி முதல் அமலில் இருந்து வந்தது. வரும் 10-ம் தேதி முதல் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார். முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று (சனிக்கிழமை) முதல் அங்கு ஓட்டல்கள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து