முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அதிபர் டிரம்பின் பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.   இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் திட்டமிட்டபடியே அதிபர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறங்கி இருக்கிறார். 

கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிபர்  டிரம்பின் பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர் தேர்தல் பிரசாரத்துக்காக அதிபர் டிரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டிரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து