தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராக டி காக் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      விளையாட்டு
D Kock 2020 07 05

Source: provided

தென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் வீரராகவும் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டால் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா வைரஸ் தொற்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.  ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் டி காக் சிறந்த வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டில் 21 வயதாக லாரா வால்வார்த்ட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி காக் 2-வது முறையாக சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இதற்கு முன் கல்லீஸ் (2004, 2011), நிதினி (2005, 2006), அம்லா (2010, 2013), டி வில்லியர்ஸ் (2014, 2015), ரபடா (2016, 2018) ஆகியோர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து