முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய குழுவுடன் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் பற்றி சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் நேற்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மூன்றாவது முறையாக மத்திய சுகாதார குழுவினர் கடந்த புதன்கிழமை சென்னை வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று தலைமை செயலகத்தில், மத்திய குழுவினர் சந்தித்து, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். 

இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் - முதன்மை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மத்திய குழுவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் - இணை செயலாளர் ராஜேந்திர ரத்னு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் இணை செயலாளர் சுபோத் யாதவ், இ.எம்.ஆர். இயக்குனர் டாக்டர் பி.ரவீந்திரன், துணை இயக்குனர் டாக்டர் சுஹாஸ் எஸ்.தான்டோர், தொற்றுயியல் நிபுணர் டாக்டர் ஜி.பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நேற்று முன்தினம் காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனையின் போது, கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய்த் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினரிடம் அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கரும் மற்றும் அதிகாரிகளும் விளக்கமளித்தனர். 

அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர்.

பின்னர், சென்னை புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கொரோனா நலவாழ்வு மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகு பட்டாளத்தில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துவமனையையும் பார்வையிட்டனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, தமிழகத்தில் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். 

நோய் பரவல், நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய குழுவினரிடம் மாவட்ட கலெக்டர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதார குழுவினர், நேற்று (வெள்ளிக்கிழமை) அயனாவரம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மத்திய குழுவினர் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து