முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன. எனினும் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. அதே நேரத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகளும் முழுமையாக நடைபெறவில்லை.  இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்து முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதற்கிடையே யாரும் எதிர்பாராத விதமாக 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் ஒட்டுமொத்தமாக 88.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.  சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து