முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நல்ல பலனை தந்துள்ளன: அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றை தடுக்க முதல்வர்  உத்தரவுப்படி சென்னையில் நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 9-வது மண்டலத்தில் உள்ள டிரஸ்ட்புரம் கங்காராம் தோட்ட பகுதியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அருகில் இருந்த சிவன் கோவில் தெருவில் உள்ள வணிகர்களிடம் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வருபவர்களுக்கு பொருட்கள் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

அதன் பின்பு டிரஸ்ட்புரம் 6-வது தெரு மற்றும் மண்டலம் 8-ல் சிவானந்தா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு கையேடு ஆகியவற்றை வழங்கினார்.  பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வரின் உத்தரவுப்படி ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்டு வரும் துரிதமான, உறுதியான, தேவையான நடவடிக்கைகள் மூலம் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம் மிகப்பெரிய பலனை தந்து இருக்கிறது. இதுவரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 ஆயிரத்து 106 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இதன்மூலம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 805 பேர் பயன் அடைந்துள்ளனர்.  இந்த முகாமின் மூலம் 50 ஆயிரத்து 730 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் கண்டறியப்பட்டுள்ளது. 46 ஆயிரத்து 277 பேர் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். முதல்வர்  அறிவித்த முழு ஊரடங்கும் தொற்று குறைய காரணமாக இருந்துள்ளது.

வெகு விரைவில் சென்னை மாநகராட்சியில் தொற்று இன்னும் குறைவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெறுவதால் நோய் தொற்று குறைந்து வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை விலையில்லாமல் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து