முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (14.7.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான 217 கோடியே  27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், பெரம்பலூர், புதுக்கோட்டை,  நாகப்பட்டினம், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 31 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.   

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற  பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர்,  வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி (மாநில நெடுஞ்சாலை 116) கிலோ மீட்டர் 14/300-36/700 மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு (மாநில நெடுஞ்சாலை 58) கிலோ மீட்டர் 0/0-26/811 வரையிலும், 217 கோடியே  27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

மேலும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் - மழவராயநல்லூர் சாலையில், எழுமூரில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொளக்காநத்தம் - சிறுகன்பூர் சாலையில், கொளக்காநத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள  2 பாலங்கள், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், பெருமநாடு - கொன்னையூர் சாலையில் பிரிந்து ஆத்தங்காடு - திருநட்டாம்பட்டி சாலையில், ஆத்தங்காட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருமயம் வட்டம், திருமயத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குளத்தூர் வட்டம், கீரனூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டிடங்கள்,  நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் - கருப்பம்புலம் கடினல்வயல் சாலையில், கருப்பம்புலத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி சாலையில், மருதூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் - பன்னாள் சாலையில், ஆயக்காரன்புலத்தில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், குறவன்குளம் சாலையில் குறவன்குளத்தில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பெரும்செல்வவிளை சாலையில், பெரும்செல்வவிளையில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கயத்தார் - கழுகுமலை சாலையில், தெற்கு இலந்தைகுளத்தில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  விளாத்திக்குளம் வட்டம், புதூர்- பரளச்சி சாலையில், வன்னிப்பட்டியில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எட்டயபுரம் வட்டம், மீனாட்சிபுரம் - வெங்கடாசலபுரம் சாலையில் வெங்கடாசலபுரத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்  கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன்கோவில் - வீரசிகாமணி சாலையில், தளவாய்புரத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் பிரிந்து செல்லும் கரிசல்குளம் சாலை (வழி) ரெட்டியபட்டி - பந்தப்புளி சாலையில், கிலோ மீட்டர் 1/10-ல் பந்தப்புளியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கிலோ மீட்டர் 4/6-ல் கரிசல்குளத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாங்குடி சாலையில் மாங்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரிவலம்வந்தநல்லூர் - உள்ளார் சாலையில், கரிவலம்வந்தநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி - கொளக்கட்டாகுறிச்சி சாலையில், நடுவப்பட்டியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகிரி வட்டம், அம்மன்குளம் காட்டூர் சாலையிலிருந்து நெற்கட்டும்செவல் வரை செல்லும் சாலையில், தலைவன்கோட்டையில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ராயகிரி - மேற்கு தொடர்ச்சி மலை சாலையில், உள்ளாரில்  70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடையநல்லூர் வட்டம், நகரம் - சங்கரன்கோவில் சாலையில், வடமலாபுரத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 9 பாலங்கள் என மொத்தம் 248 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். 

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை,  இராதா நகரில் 28 கோடியே  99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 27-க்கு மாற்றாக ரயில்வே கி.மீ. 25/3-4ல் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைக்கு தமிழக முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர்  கார்த்திக், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து