முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பான கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்: ரஷ்ய அமைச்சகம் தகவல்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக் கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவித்தது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

18 பேர் ஆராய்ச்சியில் பங்கேற்றனர் மற்றும் கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர் . சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது என கூறி உள்ளது. தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் ஸ்வெட்லானா வோல்ச்சிகினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.  மேலும், சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து