முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹன்னா புயல் : சூறாவளி காற்றுடன் கனமழை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அமெரிக்காவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா புயல் தாக்கியது.

அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. கடல் கடும் கொந்தளிப்பாக காணப்பட்டது.   

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஹன்னா புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும், கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து