முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்க் அணிய மறுத்த 2 பயணிகள்: பாதி வழியில் விமானத்தை திருப்பி புறப்பட்ட இடத்திற்கே வந்த விமானிகள்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் கொண்டு வந்தனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவுவதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.  குறிப்பாக, அந்நாட்டின் தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. 

டெல்டா விமானத்தில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் விமானத்திலும்,விமான நிலையத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.  இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறிய 2 பயணிகளால் டெல்டா விமானம் நடுவானில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரோய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு கடந்த ஒரு டெல்டா விமானம் 23-ம் தேதி புறப்பட்டது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிய விமான ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணிகளில் 2 பேர் தாங்கள் மாஸ்க் அணிய மாட்டோம் என விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த 2 பயணிகளிடமும் பயணத்தின் போது நீங்கள் மாஸ்க் அணிய வேண்டும் என விமான ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்த 2 பயணிகளும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த பிரச்சனை குறித்து ஊழியர்கள் விமானியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அட்லான்டா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பாதிவழியிலேயே தனது பயணத்தை நிறுத்தி மீண்டும் புறப்பட்ட இடமான டிட்ரோய்ட் நகருக்கே விமானிகள் விமானத்தை திருப்பி கொண்டு வந்தது. 

டிட்ரோயாட் விமான நிலையத்தில் தரையிடக்கப்ப்பட்ட விமானத்தில் இருந்து அந்த 2 பயணிகளும் இறக்கப்பட்டனர். அவர்களிடம் மாஸ்க் அணியவில்லை என்றால் விமானத்தில் பயணிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இரண்டு பயணிகளும் விமான நிலையத்தில் இறக்கி விட்ட பிறகு டெல்டா விமான மீண்டும் அட்லான்டா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.  இந்த தகவலை டெல்டா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து