முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு பகுதிகளில் அமைச்சர் காமராஜர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரலாற்றில் இல்லாத அளவிற்கு 28 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடந்த ஆண்டைவிட கூடுதலாக பயிரிடப்பட்டு, எதிர்வரும் காலத்தில் விளைச்சல் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட கோயம்பேடு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜர் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொரோனாவில் இறப்பு எண்ணிக்கை குறைவு இறப்பு எண்ணிக்கையில் ஒரு நாள் விவரங்களை வைத்து மட்டும் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று சொல்லிவிட முடியாது என்றார்.

அதேபோல் தொற்று குறைந்து வருகிறது என்ற அவர், மற்ற நோயின் காரணமாகத் தான் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் வருகிறது. எனவே கொரோனாவினால் மட்டும் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது என்றும் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாகதான் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது என்றும், தற்போது அந்த பகுதியில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் முழுவதுமாக தொற்று அகற்றப்பட்ட பின்னரே இது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பானது அதிகரித்துள்ளது. 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே நெல் கொள்முதல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 28 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளோம் என்றும், 5 ஆயிரத்து 117 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டு, இதன் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சென்ற ஆண்டைவிட ஒரு லட்சம் ஏக்கர் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், வருகிற காலத்தில் விளைச்சல் இன்னும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் தெளிவாக கூறிவிட்டதாகவும், அது தான் அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.இந்த ஆய்வின் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து