நவீன இந்தியாவின் அடையாளமாக ராமர் கோயில் திகழும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Ramnath Govind 2020 07 25

Source: provided

புதுடெல்லி : ராம ராஜ்ய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட நவீன இந்தியாவின் அடையாளமாக ராமர் கோயில் திகழும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.  இந்த நிலையில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், 

நீதிக்கான செயல்முறையாக சமூக நல்லிணக்கத்துடன் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராம ராஜ்ய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட நவீன இந்தியாவின் அடையாளமாக ராமர் கோயில் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து