மாணிக்கம், பரமேஸ்வரி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Manikkam  Parameswari 2020 08 09

Source: provided

சென்னை : இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பொதுப்பணிகளில் உள்ளவர்களான அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டவர்களையும் பாதித்து வருகிறது.

இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பல்வேறு எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல், மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து