முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      இந்தியா

புதுடெல்லி : நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜ.க. தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ம் தேதி டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.

இதனால் சுப்ரீம் கோர்ட்  தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. நேற்று அந்த வழக்கு மீதான தீர்ப்பை அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு வழங்கியது. 

அப்போது பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 20-ம் தேதி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசந்த பூஷண் தனது கருத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து