Idhayam Matrimony

முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
stalin 2025-01-06

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெறும் இம்மாநாட்டில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். 

தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார். இதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கள் பகுதியில் பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் திடல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணிக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு தொடங்குகிறது.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதல்வர்  மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதில் 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். முதல்வர்  மற்றும் துணை முதல்வர் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தரும் முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து