முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புறங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியேற்போம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கிராமப்புறங்களில் தொற்று நோய்யை பரவாமல் தடுக்க மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதி ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் தலைமை தாங்கினார் மகளிர் திட்ட அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.  1,140 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 62 லட்சம் கடன் உதவியை வழங்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கி பேசியதாவது, 

மனித குலத்திற்கு சவால் விடும் வகையிலும் வரலாறு காணாத அச்சுறுத்தல்களையும் கடந்த 5 மாதங்களாக நாம் சந்தித்து வருகிறோம் இதில் நமது முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை போர்க்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவிற்கு முன்மாதிரியாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு நம்மை காப்பாற்றி வருகிறார்.

அதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். கோவிட் காலத்தில் வேளாண் பணிகளுக்காக முதல் ஊரடங்கில்பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்தார் அதன்மூலம் வேளாண் மக்கள் தங்கள் விளை பொருள்களை சந்தை படுத்தினர்.

இதில் மகளிர் சுயஉதவி குழுக்கள் பங்கு மகத்தானது மதுரை மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி கூட குப்பைகளில் கொட்டி வீணாகவில்லை.  அந்த அளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கு இருந்தது இதன் மூலம் தேங்காய் உற்பத்தியாளர்கள் வாழைஉற்பத்தியாளர்கள் எல்லாம் பாராட்டி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது கொரோணா காலத்தில் முதன்முதலாக மதுரை மாவட்டத்திலுள்ள மகளிர் குழுக்கள் முன்மாதிரியாக தமிழக அரசுக்கு நிவாரண நிதியினை வழங்கினார்கள்.

தற்பொழுது சில தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார் இந்த நேரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் இதற்கு மகளிர் குழுக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் உங்கள் பகுதி இருக்கும் கிராமப்புறங்களில் மக்களிடம் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,

கைகளை நன்றாக சோப்பு கழுவ வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று மக்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரையில் இந்த தொற்று நோய் அதிகமாக இருந்தது.

தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நோய்தொற்று குறைவாக மாவட்டமாக நாம் பிடித்துள்ளோம் விரைவில் இந்த நோய் இல்லாத மாவட்டமாக மதுரையை உருவாக்க வேண்டும்.

அதேபோல் தமிழகம் முழுவதும் கடந்த 2011 முதல் தற்போது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 67 ஆயிரம் கோடி அளவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது இதுபோல் எந்த மாநிலத்திலும் மகளிருக்கு வழங்கப்படவில்லை என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். 

இந்தக் கோவிட் காலத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழகம் முழுவதும் உள்ள1,53,576 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5,974 கோடி வங்கிக் கடன் வழங்க பட்டுள்ளது இதன் தனியே கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 67,354 குழுக்களுக்கு 720 கோடி அளவில் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் வருமானத்திற்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தொற்று நோய் காலத்திலும் 2கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை ரேஷன் கடை மூலம் அம்மா அரசு வழங்கியுள்ளது மதுரை மாவட்டத்தில் 8 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பட்டுள்ளன. 

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் இன்று கமலா ஹாரிஸ் தமிழ்நாடு சேர்ந்த பெண் இன்று அமெரிக்காவில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இது தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாகும் நம் தமிழகத்தில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். இந்த கோவிட் காலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய குழுக்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று முதலமைச்சரை உங்களை பாராட்டி உள்ளார் என்று அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் தேவராஜ், காளிதாஸ் ,லலிதா மற்றும் கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி ,அன்பழகன், தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வம்,சிங்கராஜ் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து