சீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை: ராஜ்நாத்சிங்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      இந்தியா
rajnath-2020 09 15

Source: provided

புதுடெல்லி : இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. கடந்த 3 மாதமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.

இதற்கிடையே, பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

இந்நிலையில், சீனா உடனான எல்லையில் தற்போதைய நிலை குறித்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து