கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜூக்கு கொரோனா

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Basavaraj 2020 09 16

Source: provided

பெங்களூரு : கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா வைரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர். 

இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

எங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுவனுக்கு  கொரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

கடந்த காலங்களில் என்னை சந்தித்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து