தமிழக சித்த மருத்துவ நிறுவனத்திற்கு தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை எம்.பி. பேச்சு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Thambidurai-MP 2020 09 16

Source: provided

புதுடெல்லி : குஜராத் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் இருக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் வேண்டுகோள் விடுத்தார்.

மாநிலங்களவையில் நேற்று ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா மீதான விவாதத்தில், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியதாவது:-

சித்த மத்துவமும் மிகச்சிறந்த மருத்துவ முறை. எனவே, தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்குவது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும். குஜராத் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் இருக்க வேண்டும்.   இவ்வாறு அவர் பேசினார்.

கேரளத்தில் ஆயுர்வேத மருத்துவம் பிரபலமானது. அப்படியிருந்தும் ஆயுர்வேத கல்வி நிறுவனம் குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது ஏன் கேரளாவைப் பற்றி அரசு நினைக்கவில்லை? ஆயுர்வேதத்திற்கு கேரளாவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி கே.கே.ராஜேஷ் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து