முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ராமநாதபுரம், தூத்துக்குடியில் 22-ல் முதல்வர் எடப்பாடி ஆய்வு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின் போது பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

அதை தொடர்ந்து பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. மாவட்டங்களில் நடந்து வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். 

இதுவரை கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 22-ம் தேதி செவ்வாய்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம் சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து கார் மூலம் மதியம் 3 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார். அவருக்கு மாவட்ட எல்லையில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 3.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் சத்யா ரெஸ்டாரன்டில் தங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து