முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் புகார்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை  அதிபர் டிரம்ப் மீது  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த  1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ்  தொடரின் போது,  மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டிரம்ப் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதில் ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்.

கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஏமி தன் விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அணைத்து முத்தமிட்டதாகவும் அவரது பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்த்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

23 ஆண்டுகள் கழித்து சரியாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு  முன்னர் மாடல் நடிகை புகார் அளித்துள்ளது அந்நாட்டு அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.  ஆனால், 

இது குறித்து பேசிய டிரம்ப், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

டிரம்ப்க்கு எதிராக இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இதுவரை 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து