முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில் இயக்க அனுமதி

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை சென்ட்ரல் - திருப்பதி, எா்ணாகுளம் - கொச்சுவேளி ஆகிய வழித்தடங்களில், இரண்டு தனியாா் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்த தனியாா் ரயில்களைப் பொருத்தவரை சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வாரம் ஒருமுறையும், எா்ணாகுளம் - கொச்சுவேளி வழித்தடத்தில் வாரம் 3 முறையும் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி வரை, சனிக்கிழமை தோறும், இரவு 7.20-க்கு புறப்படும் தனியாா் ரயில், அன்றிரவு 10.30 மணிக்கு திருப்பதியை அடையும். மறு மாா்க்கமாக திருப்பதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.50 சென்டரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில், அரக்கோணம், ரேணிகுண்டா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இது தவிர எா்ணாகுளம் - கொச்சுவேளி வழித்தடத்தில் வாரம் மூன்று முறை இயக்கப்படும் தனியாா் ரயில், கொல்லம், கோட்டயம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து