எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு தனி விமானத்தில் துணை ஜனாதிபதி புறப்படுகிறார். காலை 10 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை விமான நிலையத்தில் துணைநிலை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
விமான நிலையத்தில் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை கம்பன் கலையரங்கத்துக்கு 10.20 மணிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில், குமரகுரு பள்ளத்தில் ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 11.20 மணிக்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து பாரதியின் நினைவு இல்லத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து 11.50 மணிக்கு குமரகுரு பள்ளத்தில் திறக்கப்பட்ட குடியிருப்புகளை அவர் பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்து 12.20 மணிக்கு மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் மதியம் ஒரு மணிக்கு ராஜீவ்காந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் சாப்பிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மதியம் 3 மணிக்கு காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் சர்வதேச மாநாடு மையத்தை திறந்து வைத்து, 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி புதுவையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


