முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு,  பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு கிராமத்தில் அரசின் கழிவுகள் கொட்டும் தளம் உள்ள பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 200 வீடுகள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது வீடற்ற நிலையில் உள்ளனர். இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. மேலும், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாகவும் மாறியுள்ளது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ பெங்களூருவின் கோகிலு கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் பேசினேன். இத்தகைய நடவடிக்கைகள் மனித பாதிப்புகளை மையமாகக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கை, உணர்திறன் மற்றும் கருணையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆழ்ந்த கவலையை அவர்களிடம் தெரிவித்தேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்களே நேரடியாகப் பேசி, குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமான வழிமுறையை ஏற்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து