முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாக மாற்றுவோம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அறிவு, தொழில் முனைதல், புதுமைகள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் ஆகும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பேசும்போது குடியரசுத் தலைவர் இவ்வாறு கூறினார்.

ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாகவும், பாரத மாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமகவும் மாற்ற நாம் பாடுபடுவோம். ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், அங்குள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் ஸ்ரீ நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 

அவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய ஜனாதிபதி, உறுதியான முயற்சிகளின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தி, இந்த சொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து