உ.பி. இடைத்தேர்தலில் மாயாவதி தனித்து போட்டி

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Mayawati 2020 09 21

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த 8 தொகுதி இடைத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த 8 தொகுதிகளில் 6 தொகுதிகள் பா.ஜ.க. வசமும், 2 தொகுதிகள் சமாஜ்வாடி வசமும் இருந்த தொகுதிகளாகும்.

இந்த நிலையில் 8 தொகுதிகளில் பா.ஜ.க.வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு ஓரணியில் போட்டியிட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்து வந்தன.

ஆனால் 8 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து