முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி.யின் மெல்லிய குரலை தீய வைரஸ் முடக்கி விட்டது: துணை ஜனாதிபதி வெங்கையா வேதனை

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  பாலசுப்ரமணியம் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சோகமான மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவரை நான் பல ஆண்டுகளாக அறிவேன். இது உண்மையிலேய, இசை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஆழமான உணர்ச்சி தருணம். ரசிகர்களால் எஸ்.பி.பி. அல்லது பாலு என அன்பாக அழைக்கப்பட்ட அவர், எனது சொந்த ஊரான நெல்லூரைச் சேர்ந்தவர். 

அவரது மெல்லிசை பாடல்களை கேட்டுள்ளதாலும், தாய்மொழி மீது அவருக்கு இருந்த பற்றாலும், ஒரு தலைமுறை முழுவதும் திறமையான இளம் இசை கலைஞர்களை அவர் வளர்த்துள்ளதாலும், அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. 

எனது இதயத்திலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இசைப் பிரியர்களின் மனங்களிலும் அவர் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார். அவரது மெல்லிய குரல், துரதிர்ஷ்டவசமாக தீய வைரஸால் முடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது புன்னகையும், நகைச்சுவையும் நம் நினைவுகளில் பொதிந்திருக்கும். அவரது அசாதாரணமான பாடல்கள், நம் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் மற்றும் வரவிருக்கும் மிக நீண்ட காலத்திற்கு நம் உணர்வில் எதிரொலிக்கும்.  நான் நெருக்கமாக அறிந்த பிரபல இசைகலைஞருக்கு, நான் மரியாதை செலுத்துகிறேன்.

எதிர்பாராத இழப்பை தாங்கி கொள்ளும் பலத்தை, அவரது குடும்பத்துக்கு இறைவன் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து