முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீடி, சிகரெட்டை தனித்தனியே விற்க மராட்டிய அரசு தடை

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சிகரெட் பாக்கெட்டுகளை  வாங்குமளவு பொருளாதாரம் இல்லாததால், 16, 17 வயது இளைஞர்களிடம் பரவி வரும் புகைப்பழக்கம் குறையும் என புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக புகையிலை பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்ட போது, புகைபிடிப்போரின் வீதம் 8 சதவீதம் வரை குறைந்தததும் ஆய்வில் தெரியவந்ததாக கூறிய அவர், சிகரெட்டுகளை சில்லறைகளை விற்பனை செய்ய அனுமதித்தால்  வரி உயர்வின் தாக்கம் பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து