முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் கொரோனா பலி 20 லட்சத்தை தாண்டலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி பரவலாக விநியோகிக்கப்படுவதற்கு முன்னா் உலகம் முழுவதும் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து, அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் கூறியதாவது: 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வருவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது. 

அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட தீவிரமாக அதிகரிக்கும்.

கொரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்கு முன்னா், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காகக்கூடும். அந்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்றின் பரவல் பாதையைக் கண்டறிதல், சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவதல் ஆகிய பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது ஆகும் என்றாா் அவா். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து