முதல்வர் வேட்பாளர் 7-ம் தேதி அறிவிப்பு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      தமிழகம்
Srinivasan 2020 09 30

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முதல்வர்  வேட்பாளர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர்  வேட்பாளர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7-ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.  

இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டனர்.  

இந்த நிலையில்,  அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை ,நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம், 7-ம் தேதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்  என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து