முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர படை துணை தளபதிக்கு கொரோனா: அமெரிக்க பாதுகாப்பு துறை தளபதிகள் அனைவரும் தனிமை

புதன்கிழமை, 7 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க கடலோர காவல்ப்படை துணை தளபதிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி உள்பட பாதுகாப்பு படையின் முக்கிய தலைவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. 

வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவே அதிபர் உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.   

இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்படை துணை தளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார்.  

பென்டகன் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணை தளபதி, ராணுவம், விமானப் படை, கடற்படை தளபதி என அந்நாட்டின் பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். 

இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல் படை துணை தளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதையடுத்து, பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணை தளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து