முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் திருத்த மசோதாக்கள்: ராகுல், பிரியங்காவுக்கு மத்திய மந்திரி சவால்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வேளாண் திருத்த மசோதாக்கள் தொடர்பாக ராகுல்காந்தி, மற்றும் பிரியங்காவுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சவால் விடுத்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவை சட்டமாக மாறின. 

இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் மீது மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கடுமையான தாக்குதலைத் தொடுத்து உள்ளார். மேலும் நாட்டில் விவசாயிகளை 'தவறாக வழிநடத்தியதாக' குற்றம் சாட்டினார். 

‘ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அந்த சகோதர-சகோதரிக்கு விவசாய நிலங்களில் உள்ள செடிகளின் இலைகள் மூலம் அந்த பயிரை அடையாளம் காண முடிந்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார்’ என செகாவத் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து