எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக சனிக்கிழமை(மார்ச் 7) உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மார்ச் மாத முதல் வாரத்தின் இறுதிநாளான நேற்று (மார்ச் 7) வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி, தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து, புதிய விலையாக ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பின், வணிக சிலிண்டர் விலை தற்போது மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் மக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.60 உயர்த்து, புதிய விலையாக ரூ.853 -இல் இருந்து ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு நற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.853 - இல் இருந்து ரூ.913 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.852.50 - இல் இருந்து ரூ.912.50 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் இருப்பதாக மத்திய அரசு உறுதியளித்த போதிலும், இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் போன்ற வணிகங்களை பெரிதும் பாதிக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


