Idhayam Matrimony

மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      ஆன்மிகம்
Sabarimalai 2024-01-02

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக கடந்த 12-ம்  தேதி நடை திறக்கப்பட்டது முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் பெற்று வருகின்றனர்.

13-ம்  தேதி பொதுவேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.

நேற்று முன்தினம் சபரிமலையில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் படி பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். சபரிமலை வந்த பக்தர்களை பாதுகாப்பு போலீசார் ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்று (17-ம் தேதி) வரை நடை திறந்திருக்கும். இன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து