எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தெஹ்ரான் மற்றும் மத்திய ஈரானின் ராணுவத் தளங்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது புதியதாக 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 7) அறிவித்துள்ளது. இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து ஈரான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனையின்றி சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


