Idhayam Matrimony

வருகிற 4-ம் தேதி திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நேரில் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2026      சினிமா
Rashmika-Modi-2026-02-27

ஐதராபாத், வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார். ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.

இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

இதில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சரியாக நேற்று காலை 10.10 மணிக்கு இந்த திருமணம் நடந்தது. முதலில் விஜய் தேவரகொண்டா குடும்பத்து வழக்கப்படி தெலுங்கு பாரம்பரிய முறையிலும், அதனைத்தொடர்ந்து ராஷ்மிகா குடும்ப வழக்கப்படி கொடவா பாரம்பரிய முறையிலும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களின் பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம்.

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதிக்கு திரையுலகினரும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  இதனிடையே வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மார்ச் 4இல் இவர்களது திருமண வரவேற்பில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து