முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தல்: வாக்காளர் பட்டியல் திருத்த முறை குறித்து சென்னையில் வரும் 3-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : .தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சாகு தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியல் திருத்த முறை குறித்து வரும் 3-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. 

அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தலை சந்திப்பதற்கான மற்ற பணிகளும் தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் வேறு விதமாக இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. 

தமிழகத்தின் பிரதான கட்சியான ஆளும் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

இதை தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதன் பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு  கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.  பிரச்சினை வராதா, அதில் குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்து விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கூறி உள்ளார். 

இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் சின்னத்தில் போட்டியிடப் போவதாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் அறிவித்து உள்ளன.

ஆனால் இப்போதே சின்னம் பற்றி பேச வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் வைகோ, திருமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டு தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு முறை தயார் செய்யப்படும்போதும் பட்டியலில் திருத்தம், நீக்கம் குறித்து அனைத்துக் கட்சியினரும் தங்கள் தரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர். பட்டியல் தொடர்பான தங்கள் சந்தேகங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 20201-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க அடுத்த மாதம் நவம்பர் 3-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தலைமையில் சிறப்பு வாக்காளர் திருத்த முறை குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து